×

குட் நியூஸ்..!! தொடர் சரிவில் தங்கம் விலை..!!

 

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் சில தினங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறைந்து வருகின்றன.

தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,250 ரூபாய்க்கும், சவரன், 1,14,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 275 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் குறைந்து, 14,160 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் சரிவடைந்து, 1,13,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 270 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.70 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப்.24) சவரனுக்கு 480 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 60 குறைந்து 14,100-க்கும், சவரன் 1,12,800-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த 5 நாள்களில் மட்டும் தடாலடியாக சவரனுக்கு 2,000 குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.