குட் நியூஸ்..!! தங்கம் விலை மளமளவென சரிவு..!!
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித ஏற்றத்திற்கு பிறகு இரண்டு நாட்கள் தங்கம் விலை ஏறிய நிலையில், நேற்றும் இன்றும் சற்று குறைந்திருக்கிறது. எனினும், இந்த விலை இறக்கம் தொடருமா என்பது சந்தேகம் தான்.
இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால் வாடிக்கையாளர்கள் தேவைக்கு அளவாக மட்டும் தங்கம் வாங்கும்படியும், முதலீட்டாளர்கள் இப்போதைக்கு அவசர முடிவெடுக்க வேண்டாம் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நேற்று (செப்டம்பர் 22) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கும், ஒரு சவரன் ரூ.680 குறைந்து ரூ.1,13,480-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.255-க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.
இன்று (செப்டம்பர் 23) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து ரூ.14,135-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து, ரூ.1,13,080-க்கு விற்பனையாகிறது.