×

குட் நியூஸ்..!! தங்கம் விலை ரூபாய் 8000 குறைந்தது..!!

 

தங்கம் விலையானது இந்த மாதம் தொடங்கியதிலிருந்து பெரிய அளவில் மாற்றமின்றி விற்பனையாகி வந்தது. இதனால் நகை பிரியர்கள் தங்கம் வாங்குவதில் மீண்டும் ஈடுபாடு காட்ட தொடங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது.

ஆபரண தங்கத்தின் விலை நேற்று ரூ. 400 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,800க்கு விற்பனை.

நேற்று ஒரு சவரன் ரூ.110,400-க்கும், ஒரு கிராம் ரூ.13,800-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு மேலும் ரூ.2,400 சரிந்து ரூ.108,000-க்கும், கிராமுக்கு ரூ.300 குறைந்து ரூ.13,500-க்கும் விற்கப்படுகிறது.

கடந்த ஜூன் 1ஆம் தேதி ஒரு சவரன் ரூ.116,000-க்கு விற்கப்பட்ட நிலையில், 11 நாட்களில் ரூ.8,000 குறைந்துள்ளது.