குட் நியூஸ்..!!தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு..!!
சர்வதேச நிலவரங்களால், சில தினங்களாக, நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று (பிப்ரவரி 19), தங்கம் விலை கிராமுக்கு, 270 ரூபாய் உயர்ந்து, 14,500 ரூபாய்க்கும், சவரனுக்கு, 2,160 ரூபாய் அதிகரித்து, 1,16,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் உயர்ந்து, 270 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் அதிகரித்து, 2.70 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2.70 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.