குட் நியூஸ்..!! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 அதிரடியாக குறைந்தது..!
தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களாக குறைந்து வருகிறது. ஆனால் இந்த சரிவு நிரந்தரமானதா என்றால் அது கேள்விக்குறி தான். ஏனெனில் உலக நாடுகளிடையேயான பெருமளவு வர்த்தகம் அமெரிக்க டாலரில் தான் நடைபெறுகிறது. இதனால் கச்சா எண்ணெய், தங்கம் போன்றவற்றின் விலையும் அமெரிக்க பொருளாதார நிலையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
வருங்காலங்களில் அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதை குறைக்க எண்ணி பல நாடுகள் தங்கத்தை பெருமளவில் வாங்கி வருகின்றன. இதன் காரணமாகவே, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்த பிறகும் கூட தங்கம் விலை இன்னும் பெரிய அளவில் குறையாமல் இருக்கிறது. இனிவரும் நாட்களில் தங்கம் விலை ஏறுமே தவிர இறங்குவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 அதிரடியாக குறைந்து விற்பனையாகிறது.
நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,080க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,080 குறைந்து ரூ.1,12,000க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.135 குறைந்து ரூ.14,000க்கு விற்பனையாகிறது.
அதே போல வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.250க்கும் ஒரு கிலோ ரூ.5000 குறைந்து ரூ.2,50,000க்கும் விற்கப்படுகிறது.