தங்கக் கடத்தல் - நடிகைக்கு ஓராண்டு சிறை
தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படும் வழக்கில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்கரகாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர். கைது செய்யப்பட்ட நடிகை ரான்யா ராவ், கிச்சா சுதீப்புடன் மாணிக்யா உள்ளிட்ட கன்னடப் படங்களிலும், 'பதாகி' மற்றும் 'வாகா' போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கன்னட நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்நிலையில் தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை காலத்தில் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.