☰
×

“தாய் மாமனாக..”- 2026 ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

 

கடந்த ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை மதுரை செல்கிறார். பகல் 12 மணிக்கு 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். பின்னர் காந்தி அருங்காட்சியகத்திற்குச் செல்லும் அவர், மாலை 4 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். கடந்த ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகள் இடம்பெற்றுள்ள செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்கள் நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் திட்டத்தை நாளை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


முதலமைச்சர் விஜயால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முதற்கட்ட 89,955 ஒரு கிராம் (22 கேரட்) தங்க மோதிரங்களை ஜோய் ஆலுக்காஸ் குழுமம் வெற்றிகரமாக தயாரித்து முடித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 4.41 லட்சம் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.