×

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 43,040 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.42,920 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ரூபாய் குறைந்து 5,365 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று வெள்ளில் விலை உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 43,040 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் அதிகரித்து 5,380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.