×

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... எவ்வளவு தெரியுமா?

 

கொரோனா பரவல் குறைந்த பிறகு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. அவ்வப்போது சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் குறிப்பிடத்தகுந்த அளவில் விலை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. கொரோனாவுக்கு பின் பாதுகாப்பான முதலீட்டின் பக்கம் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வங்கிகளின் வட்டி விகிதங்கள் குறைந்திருப்பதால், தங்கத்தில் முதலீடு அதிகரித்திருக்கிறது.

இதனால் தங்கத்தின் தேவை முன்பை விட அதிகமாகவே உள்ளது. சந்தையில் தேவை அதிகரித்தால் விலையும் உயரும் என்பது எழுதப்படாத விதி. அதற்கு தங்கமும் விதிவிலக்கல்ல. இதனால் கடந்த சில நாட்களாவே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே இருந்தது. ஆனால் இன்று 137 ரூபாய் வரை குறைந்துள்ளது. இது சற்று ஆறுதல் அளிக்ககூடிய விஷயமாக உள்ளது.

அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 605க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.137 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 840-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 39 ஆயிரத்து 752-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமின்றி ரூ 70.40-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 70,400ஆக உள்ளது.