×

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம்  44,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி, கடந்த வெள்ளி கிழமை மாலை, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.44,080-க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.5,510-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கடந்த சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.. ஒரு கிராம் தங்கம் ரூ.45 உயர்ந்து ரூ.5,555-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம்  44,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 530 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது.