×

தங்கம் விலை கிடுகிடு உயர்வு..! சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்தது..!!

 

தங்கம் விலை ஜெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நேற்று காலை ரூ.1,280 கூடிய நிலையில் மாலை சவரனுக்கு ரூ.2,320 என ரூ.3,600 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது.ஆபரணத்தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.450 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

இன்று (ஜன.21) தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.14,250க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2.800 உயர்ந்து ரூ.1,14,000க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.340க்கும், ஒரு கிலோ ரூ.3,40,000க்கும் விற்பனையாகிறது.