2 நாட்களில் ₹3,600 உயர்வு: ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்..!!
தங்கம் விலை மீண்டும் ஏறத் தொடங்கியிருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 13 ஆயிரம் குறைந்த நிலையில் இந்த மாதம் தொடங்கியதிலிருந்தே விலையேற்றம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. ஒரு சில நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 7 ஆயிரம் அதிகரித்துள்ள தங்கம் விலையானது, இனிவரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஒருசில நாட்களாகவே தங்கம் விலையானது காலை, மாலை என இருவேளை ஏறத் தொடங்கியிருக்கிறது. நேற்று காலை கிராமுக்கு ரூ. 150 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ. 150 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,550-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் ரூ. 150 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், நேற்று காலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்த நிலையில் மாலை மீண்டும் ரூ. 1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,08,400க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் ரூ. 1,200 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,09,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் தொடர் ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று காலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்த நிலையில், மாலையும் ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 255-க்கு விற்கப்பட்டது. இன்று மீண்டும் ரூ. 5 உயர்ந்து ரூ. 260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 5,000 அதிகரித்து ரூ. 2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது