தங்கம் விலை உயர்வும், வெள்ளி விலை சரிவும்: இன்றைய விலை நிலவரம்..!
தங்கம் விலை நாளுக்கு நாள் சரிந்து நகை பிரியர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,080 குறைந்திருக்கிறது. நாளுக்கு நாள் நகை விலை குறைந்து வருவதால் இது தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரமா? அல்லது இன்னும் விலை குறைவுக்கு காத்திருக்க வேண்டுமா? என்ற குழப்பத்தில் இருப்போருக்கு, இந்த விலை குறைவு தற்காலிகமானது தான் என நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தற்போது உலக நாடுகளிடையேயான போர் பதற்றம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க டாலர் மதிப்பு மாற்றம் போன்ற பல்வேறு காரணிகள் தங்கம் விலை குறைய காரணமாக சொல்லப்பட்டாலும், இந்த நிலைமை சீரடையும் பட்சத்தில் தங்கம் விலை விறுவிறுவென ஏற வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.
இதனால் ஒரு சவரன் விலை ரூ. 2 லட்சம் வரை கூட உயரலாம் என்பதால் குறைந்த அளவில் நகை வாங்க நினைப்போர் இப்போதே வாங்குவது உகந்தது என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து விற்பனையாகிறது.
நேற்று ஒரு சவரன் ரூ.1,04,480க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560க்கு விற்கப்படுகிறது.
மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.13,070க்கு விற்கப்படுகிறது.
அதே போல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.220க்கும் ஒரு கிலோ ரூ.5000 குறைந்து ரூ.2,20,000க்கும் விற்கப்படுகிறது.