×

ஆபரணத் தங்கத்தின் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்..!!

 

தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதத்தில் பெரும்பாலும் தங்கம் விலை சரிவை நோக்கி சென்ற நிலையில், மேற்காசிய நாடுகளில் நிலவி வந்த போர்பதற்றம் காரணமாக சொல்லப்பட்டது. ஒரே மாதத்தில் தங்கம் கிட்டத்தட்ட 13 சதவீதமும், வெள்ளி 23 சதவீதமும் சரிந்த நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் காரணமாக, இந்த மாதத்தில் சற்று விலையேற்றம் காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் காலை முதல் சரிவில் இருந்த தங்கம் விலை தற்போது ஏறுமுகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப்.27) சவரனுக்கு 240 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராமுக்கு 30 உயர்ந்து 14,230-க்கும், சவரன் 1,13,840-க்கும் விற்பனையாகிறது.

. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 270-க்கும், பார் வெள்ளி கிலோ 2,70,000-க்கும் விற்பனையாகிறது.