மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: சென்னையில் இன்றைய நிலவரம்!
கடந்த மாதம் வரை சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்த தங்கம் விலை இந்த மாதத்தில் திடீரென ஏறத் தொடங்கியது நகை வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில், தங்கத்தின் மீது முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற கேள்வியோடு இருந்த முதலீட்டாளர்கள் தற்போது முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
எனினும், உலக நாடுகள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருகின்றன. இது சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல், அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை தற்போதைக்கு உயர்த்த வாய்ப்பில்லை என்ற தகவலும் தங்கம் விலை ஏற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இன்று(ஆக.18) ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.