தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?
Oct 7, 2026, 09:56 IST
இந்தியாவை பொருத்தவரை விசேஷ நாட்களில் தங்கம் விலை ஏறுமுகத்தில் காணப்படும். ஆனால், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் அதிகரித்ததன் விளைவாக சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்து வருகிறது. அதன் காரணமாக இந்தியாவிலும் அவ்வபோது தங்கம் விலை ஏறினாலும் பெரும்பாலும் இறங்குமுகத்தில் தான் இருக்கிறது.
22 கேரட் தங்கம் நேற்று ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,660-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,09,280-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,710-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,09,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது