×

சென்னையில் மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!!
 

 
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக  குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஏற்றம் காண தொடங்கியுள்ளது

ஆகஸ்ட் மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  நேற்றைய நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூபாய் 48 உயர்ந்தது. இந்நிலையில் இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து,  ஒரு கிராம் 5480 ரூபாய்க்கு விற்கப்பட்டது . சவரனுக்கு ரூபாய் 12 உயர்ந்து ஒரு சவரன் 43 ஆயிரத்து 840 ஆக உயர்ந்தது. 

அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.50 பைசா உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 ரூபாயாகவும் ,ஒரு கிலோ வெள்ளியின் விலை 80 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.