தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.800 சரிந்தது
May 24, 2024, 10:39 IST
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.800 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மே மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 21ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, 54,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 6,860 க்கு விற்பனையானது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,750க்கு விற்பனையாகியது.
இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.800 சரிந்தது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்து இன்று 53,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து 6,650 ரூபாய்க்கு விற்பனையாகிறது.