இன்று சரிவை சந்தித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக விலை உயர்ந்து வந்தது. இதே வேகத்தில் சென்றால், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடும் என்றெல்லாம் வியாபாரிகள் கூறி வந்தனர்.
கடந்த 18-ந் தேதியில் இருந்து விலை இறக்கம் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் நேற்று காலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 90,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை திடீரென உயர்ந்தது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்த சூழலில், மாலையிலும் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.70ம், சவரனுக்கு ரூ.560-ம் தங்கம் விலை உயர்ந்தது. இன்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.11,320 ஆக விற்பனை ஆனது.
அந்த வகையில், இன்று (நவ.07) தங்கம் விலை குறைந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,270க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.165க்கும், ஒரு கிலோ ரூ.1,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.