☰
×

சரசரவெனச் சரிந்த தங்கம் விலை! 2 நாட்களில் 1920 ரூபாய் வீழ்ச்சி!

 

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித்ததை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சற்று அதிகரித்த நிலையில், அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை சரிந்தது. இதனால் நகை வாங்க நினைப்போரும், சிறிய அளவில் முதலீடு செய்ய நினைப்போரும் தங்கத்தின் மீது ஆர்வம் காட்டினர். ஆனால் அக்டோபர் மாத இறுதியில் நடைபெற்ற அமெரிக்க ஃபெடரல் வங்கி ஆலோசனை கூட்டத்தில் வட்டி விகிதத்தை அதிகரிக்கவில்லை.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.1,560 சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.13,210-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,680-க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.13,015-க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ.1,04,120-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.200-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் ரூ.1,920 குறைந்துள்ளது.