×

மாதத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா??

 


 சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையாகிறது.  

சர்வதேச சந்தை நிலவரங்கள், ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஈரான் போர் உள்ளிட்ட உலக நாடுகளில் நிகழும் அசாதாரண சூழல், டாலருக்கு நிகராண இந்தியா ரூபாயின் மதிப்பு ஆகியவை காரணமாக தங்கம் விலை அதிரடியாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. அதிலும் ஜூலை மாதம் தொடங்கிய முற்பாதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை,  இரண்டாம் பாதியில் சற்று குறையத் தொடங்கியது.  

7 நாட்களுக்குப்பிறகு கடந்த 30ம் தேதி  தங்கம் விலை அதிரயாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒருசவரன் ரூ.73,680 க்கும்,  கிராம் ரூ. 9,210க்கும் விற்பனையாது, இதனையடுத்து நேற்று(ஜூலை 31) ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிந்து  ஒரு சவரன் ரூ.73,360க்கு விற்பனையானது.  இந்த நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று  தங்கம் விலை ரூ.160 குறைந்து  சரிவுடன் தொடங்கியிருக்கிறது.  

அதன்படி சென்னையில் இன்று  22 கேரட் ஆபரணத்தங்கம்  ஒரு சவரன் 73,200க்கும், கிராமுக்கு 60 ரூயாய் குறைந்து  ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ. 9,150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, ஒரு  கிராம் வெள்ளி ரூ.123க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 1,23,000க்கு விற்கப்படுகிறது.