×

இன்றும் தங்கம் விலை குறைந்தது.தொடர்ந்து 6-வது நாளாக குறைவு..!!

 
போர் பதற்றம் காரணமாக இருக்கிற முதலீடுகளை பாதுகாத்தாலே போதும் என்ற எண்ணத்தில் நிறைய முதலீட்டாளர்கள் எங்கும் முதலீடு செய்யமால தங்கள் பங்கை வைத்திருப்பதால், சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடும் குறைந்திருக்கிறது.
இதன் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அதுவே தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கும் நாட்களில் விலையும் சற்று உயர்கிறது. மற்ற நாட்களில் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும், குறைந்த அளவில் தங்கம் வாங்குகிற சாமானியர்களுக்கு சற்று ஆறுதல் கொடுத்திருக்கிறது
ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை (மார்ச் 14) கிராமுக்கு ரூ. 140 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,760க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,710க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 1,120 குறைந்த நிலையில் நேற்று ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,17,680க்கு விற்பனை.
இந்நிலையில் இன்று(மார்ச் 17) சவரனுக்கு 480 குறைந்தது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 60 குறைந்து 14,650-க்கும், 8 கிராம் கொண்ட சவரன் 1,17,200-க்கும் விற்பனையாகிறது. 
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.280-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து ரூ.2,80,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
மார்ச் 16 ரூ.14,710 ரூ.1,17,680
மார்ச் 15 ரூ. 14,760 ரூ.1,18,080
மார்ச் 14 ரூ. 14,760 ரூ.1,18,080
மார்ச் 13 ரூ.14,900 ரூ.1,19,200
மார்ச் 12 ரூ.14,970 ரூ.1,19,760
மார்ச் 11 ரூ.15,120 ரூ.1,20,960
மார்ச் 10 ரூ.15,050 ரூ.1,20,400
மார்ச் 9 ரூ.14,950 ரூ.1,19,600
மார்ச் 8 ரூ.15,050 ரூ.1,20,400
மார்ச் 7 ரூ.15,050 ரூ.1,20,400