☰
×

தங்கம் விலை 30% உயரும்- கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பு! 

 

2027ம் ஆண்டில் தங்கத்தின் விலை தற்போதைய விலையைவிட 30% சதவீதம் வரை உயரக்கூடும் எனப் பிரபல சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. 

கடந்த 15 நாட்களாக தங்கத்தின் விலைச் சரிவு கண்ட நிலையில், இன்று  சற்று உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.135 உயர்ந்து ரூ.11,600 -க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1080 கஉயர்ந்து, ரூ.92,800-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.175-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் சுமார் 36% சரிந்துள்ளது. ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட தங்கம், தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில் 2027ம் ஆண்டில் தங்கத்தின் விலை தற்போதைய விலையைவிட 30% சதவீதம் வரை உயரக்கூடும் எனப் பிரபல சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது.  2027-ஆம் ஆண்டின் இறுதியில், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கும் எனவும் வட்டி விகிதங்கள் குறையும்போது வங்கி வைப்புநிதி மற்றும் பத்திரங்களின் வருமானம் குறையும் என்பதால், தங்கம் சார்ந்த பங்குகளில் (Gold ETFs) முதலீடுகள் அதிகரித்து விலை வேகமாக உயரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று  2027 இறுதிக்குள் மீண்டும் சுமார் 30% உயரக்கூடும் என்று Goldman Sachs நிறுவனமும் கணித்துள்ளது.