#BREAKING ஷாக் கொடுத்த தங்கம் விலை! அதிரடி விலை உயர்வு
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 கூடி கடந்த 3 நாட்களில் ரூ.5,600 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 கூடி கடந்த 3 நாட்களில் ரூ.5,600 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 கூடி ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,900க்கு விற்கப்படுகிறது.
பாதுகாப்பான முதலீடு மற்றும் சொத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கத்தின் புழக்கம் அதிகம். மேலும், நமது பாரம்பரியம் மற்றும் கலாசார நிகழ்வுகளில் முக்கிய இடம் வகிக்கிறது. அதனாலேயே நமது மக்களிடையே தங்கம் விலை மாற்றம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு வரை தங்கம் விலை இனிமேல் ஏறுமுகத்தில் தான் இருக்கப்போகிறது. சாமானியர்களுக்கு தங்கம் என்பது வெறும் கனவு என்ற நிலை தான் இருந்தது. ஆனால் அதனை அமெரிக்கா - ஈரான் போர் மாற்றியமைத்தது. மடமடவென சரிந்த விலையால் வாடிக்கையாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்தாலும், தங்கத்தின் மீதான ஈடுபாடு குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.