☰
×

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு!

 

சவரனுக்கு காலை ரூ.480 உயர்ந்த நிலையில், தற்போது ரூ.1360 உயர்ந்தது. 


நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது.நவம்பர் 25ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2360 ரூபாய் குறைந்து சவரன் 91,360 ரூபாய்க்கும், கிராமுக்கு 295 ரூபாய் குறைந்து 11,420 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 165 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை (நவம்பர் 27) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்தது. இதன்மூலம், 92,800 ரூபாய்க்கு விற்பனையானது. கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து 11,6000 ரூபாய்க்கும் விற்பனை செய்யபட்டது. 

இந்நிலையில் சவரனுக்கு காலை ரூ.480 உயர்ந்த நிலையில், தற்போது ரூ.1360 உயர்ந்தது. இன்று ஒரே நாளில் சவரன் ரூ.1840 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.94,160-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.170 உயர்ந்து ரூ.11,770-க்கு விற்பனையாகிறது.  இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை 2,800 அதிகரித்துள்ளது.