×

தங்கத்தின் விலை உயர்வு; வெள்ளியின் விலை மாற்றம் இல்லை – இன்றைய விலை நிலவரம்..!

 

தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும் அடுத்த நாள் இறங்குவதுமாக போக்கு காட்டி வருகிறது. இதற்கு சர்வதேச அளவில் நிலவும் போர்ப்பதற்றம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், அமெரிக்க பொருளாதார மந்த நிலையும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆனாலும், இந்தியாவில் தங்கம் விலை தினசரி மாறுவதற்கு பல முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. தங்கம் விலை அவ்வபோது குறைந்தாலும், பண்டிகை காலம் தொடங்கி விட்டதால் பெரும்பாலும் விலை ஏற்றமே காணப்படும் என்கின்றனர் நிபுணர்கள். இருப்பினும் இன்று சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ. 1,920 குறைந்திருப்பது நகை வாடிக்கையாளர்களை சற்று ஆறுதலடைய செய்திருக்கிறது.

காலை 22 காரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,920 குறைந்தது. அதன்படி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,920 குறைந்து, ரூ.1,12,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் காலையில் தங்கத்தின் விலை ரூ.1,920 குறைந்த நிலையில் மாலையில் அதிரடியாக உயர்ந்து அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அதன்படி ஆபரண தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,920 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,120 உயர்ந்துள்ளது.

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 12) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.1,13,360-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.