×

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.960 உயர்வு..!!

 
சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு தினந்தோறும் மாற்றம் கண்டு வருகிறது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்நிய செல்வாணியை குறைக்கும் பொருட்டு உலக நாடுகள் தங்கத்தின் மீதான முதலீட்டை நிறுத்தி, அத்தியாவசிய எரிபொருளின் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
இதனை கருத்தில் கொண்டு கடந்த வாரத்தில் தங்கத்தின் மீது முதலீடு செய்ய வேண்டாம் என்று பிரதமர் மோடி வலியுறுத்திய இரண்டு நாட்களுக்குள்ளேயே தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியானது 6லிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக ஒரு சவரன் ரூ.118,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,750-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.118,960-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.14,870-க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது