தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது..!!
ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்திற்கும் கீழ் குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறியிருந்த நிலையில், அதனை நிரூபிக்கும் விதமாக கடந்த 2 நாட்களாக தங்கம் விலை ஏற்றம் கண்டுவருகிறது.
தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 25) ஒரு சவரன் ரூ.1,08,800க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று (மார்ச் 26) சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,09,360க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.13,600க்கு விற்பனயான நிலையில், இன்று ரூ.70 உயர்ந்து, ரூ.13,670க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.