×

உயர்ந்தது தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?? 

 


சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.  

இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அவ்வப்போது அதிகளவில் உயர்வதும், கணிசமாக குறைவதுமாக இருந்தாலும் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கத்திற்கான மவுசு அதிகமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. தங்கத்தை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பான மற்றும்  சிறந்த சேமிப்பாகவும் கருதுகின்றனர். அந்தவகையில் ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தும், அவ்வப்போது குறைந்தும்  வருகிறது. 

கடந்த வாரம்  தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, சனிக்கிழமை(ஜூலை 19) அன்று  சவரன் ரூ.73,360க்கும்  ஒரு கிராம் ரூ.9,170க்கும் விற்பனையானது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று  தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.  அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரன் ரூ. 73,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம்  ரூ.9,180க்கு விற்கப்படுகிறது.  அதேநேரம் வெள்ளி விலை மாற்றமின்றி, சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.126க்கு விற்கப்படுகிறது.