#BREAKING இன்ப அதிர்ச்சி! தங்கம் விலை மேலும் சரிவு
Updated: Mar 23, 2026, 15:24 IST
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.2,240 குறைந்து ரூ.1,01,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீப நாட்களாக உயர்ந்து வந்த தங்க விலை, ஒரு வாரத்திற்கு மேலாக உலகளவில் சரிவைக் கண்டுள்ளது.இன்று காலை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து, ரூ.12,950-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 5,360 குறைந்தது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 670 குறைந்து 12,950-க்கும், சவரன் 5,360 குறைந்து ₹1,03,600-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் தற்போது சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.2,240 குறைந்து ரூ.1,01,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,670க்கு விற்பனையாகிறது.