தங்க நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி: இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்த ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
மீண்டும் போர் நிறுத்தம் மேற்கொள்ள சுமூக பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதன் தொடர் தோல்வியால் சர்வதேச அளவில் பொருளாதார நிலை என்பது நிச்சயமற்ற தன்மையை அடைந்துள்ளது.
குறிப்பாக எரிபொருள் விநியோகம் பாதிப்படைந்திருக்கும் நிலையில், கச்சா எண்ணெய்யின் மீதான முதலீடு நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. அதனின் தாக்கத்தினால் தங்கத்தின் விலையும் ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது.
இன்று (ஜூலை 27) தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ரூ.1,06,960-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று (ஜூலை.27) சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. நேற்று (ஜூலை.26) ஒரு சவரன் ரூ.106,400க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.106,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.13,300க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,370க்கு விற்பனையாகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஜூலை 26: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,05,840
ஜூலை 25: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,05,840
ஜூலை 24: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,05,840
ஜூலை 23: 1 கிராம் - ரூ.13,500 1 சவரன் ரூ.1,08,000
ஜூலை 22: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,07,440