மீண்டும் அதிர்ச்சி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
Updated: Oct 3, 2025, 18:03 IST
காலையில் ரூ.880 குறைந்த நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.
இன்று காலையில் ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்தது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 840-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.161-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.87,200க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.10,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது.