#BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்வு
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்ந்துள்ளது.
உலகளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக பார்ப்பது தங்கத்தை மட்டும் தான். அதனாலேயே உலக சந்தையில் தங்கத்தின் மவுசு எப்போதும் குறைவதில்லை. ஈரான் போருக்கு முன்பு வரை தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், போர் தொடங்கியது முதலாக சரசரவென குறையத் தொடங்கியது. தற்போது போர் பதற்றம் சற்று ஓய்ந்திருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு எந்த முதலீட்டின் மீதும் தற்போது நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் தங்கம் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.14,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ரூ.1,12,800க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.270 விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், பிற்பகல் அதிரடியாக உயர்ந்தது.