×

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரிப்பு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் போது, நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்தது. இது தங்க விலை உயர்வில் எதிரொலித்தது. அதாவது, பொருளாதார மந்த நிலையால் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து, வரலாறு காணாத ஏற்றத்தை சந்திதது. பொதுமுடக்கம் நீடித்தால் தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்ட நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை குறையத் தொடங்கியது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை
 

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது.

கொரோனாவால் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் போது, நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்தது. இது தங்க விலை உயர்வில் எதிரொலித்தது. அதாவது, பொருளாதார மந்த நிலையால் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து, வரலாறு காணாத ஏற்றத்தை சந்திதது. பொதுமுடக்கம் நீடித்தால் தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்ட நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை குறையத் தொடங்கியது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,802க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.38,416க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.30க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,300க்கும் விற்பனையாகிறது.