தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக குறைந்தது..!!
இந்தியர்களின் முக்கிய சேமிப்பு மற்றும் செல்வங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். இது மட்டுமல்லாமல், முக்கிய நிகழ்வுகளிலும் தங்கம் பிரதானமாக இடம் பெறுவதால் மற்ற நாடுகளை காட்டிலும் நமது நாட்டில் தங்கத்தின் மீதான மோகமும், மதிப்பும் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், நமது நாட்டில் புழக்கத்தில் இருக்கிற தங்கத்தின் வெறும் 20% தங்கம் மட்டுமே இங்கு உற்பத்தி செய்யப்படுகிற நிலையில், மற்ற 80% வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக, உலகளவில் அமெரிக்க டாலரில் வர்த்தகமாகிற தங்கம் விலையானது டாலர் மதிப்பு மாறுவதை பொறுத்து தினந்தோறும் மாறுபடுகிறது. அதாவது அமெரிக்க வட்டி விகிதம் மாறும் போது தங்கம் விலையும் மாறுகிறது. இதனால் வரும் நாட்களில் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று குறைந்திருக்கிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.1,08,480க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.880 குறைந்து ரூ.1,07,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.110 குறைந்து ரூ.13,450க்கு விற்கப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை மாற்றமின்று ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்கப்படுகிறது.