×

அதிரடியாக சவரனுக்கு ரூ.1000 குறைந்த தங்கம் விலை..!!

 


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது.  


சர்வதேச சந்தை நிலவரங்கள், ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஈரான் போர் உள்ளிட்ட உலக நாடுகளில் நிகழும் அசாதாரண சூழல் காரணமாக தங்கம் விலை அதிரடியாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.  அதிலும்  ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தும், அவ்வப்போது குறைந்தும்  வருகிறது. கடந்த  சனிக்கிழமை (ஜூலை 19) அன்று  சவரன் ரூ.73,360க்கும்  ஒரு கிராம் ரூ.9,170க்கும் விற்பனையானது. தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை அன்று  (ஜூலை 21)   தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரன் ரூ. 73,440க்கும்,  கிராம்  ரூ.9,180க்கும் விற்பனையானது. பின்னர் செவ்வாய் கிழமை (ஜூலை 22) தங்கம் விலை ஒரே அடியாக சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து , சவரன் மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.  அதன்படி ஒரு சவரன் ரூ74,280க்கும், கிராம் ரூ.9,285க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

தொடர்ந்து நேற்றைய தினம்   (ஜூலை 23) தங்கம் விலை  ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து  ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  ஆபரணத்தங்கம் கிராமுக்கு ஒரு கிராம் ரூ.9,380க்கும், சவரன் ரூ.75,040க்கும் விற்பனையானது.  இதேபோல் வெள்ளி விலையும் நேற்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து  ஒரு கிராம் வெள்ளி ரூ.129 என்கிற புதிய உச்சத்தை தொட்டது.   

இந்நிலையில் இன்று அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.74,040க்கு விற்பனையாகிறது.  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 9,255க்கு விற்பனை செய்யப்படுகிறது.