அதிர்ச்சி உச்சம்: சவரன் ரூ.1,11,040-ஐத் தாண்டிய தங்கம் விலை!
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும் மறு நாள் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால் தங்கம் விலை ஏறுமுகத்தில் தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலையற்று காணப்படுகிறது.
நேற்று (அக்டோபர் 9 தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. இதன்படி 1 கிராம் தங்கம் ரூ.13,815-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,520-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.245-க்கு விற்பனையானது.
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 10) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.65 உயர்ந்து ரூ.13,880-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து, ரூ.1,11,040-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.