ஏறுமுகத்தில் தங்கம்; திணறும் மக்கள்: சவரனுக்கு ரூ.1200 உயர்வு..!!
கடந்த மாதம் மேற்காசிய போர், கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு ஆகிய காரணத்தினால் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது.
கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கத்தில் விலை ரூ.15 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்து நிலையில், ஈரான் போர் ஆரம்பித்த பிறகு ரூ.13 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது.
இந்நிலையில், போர் பதற்றம் சிறிது தணித்துள்ளதால், ஏப்ரல் மாதத்தில் ரூ.14 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஏப்., 17) ஒரு கிராம் ரூ.14,210-க்கும், சவரன் ரூ.1,13,680-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஏப்., 18) கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880-க்கும்விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.280-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.