கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் தங்கம்..நேற்று குறைந்து இன்று அதிரடியாக உயர்ந்தது..!!
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் அச்சம், வலுவான அமெரிக்க டாலர் மற்றும் அமெரிக்க பத்திர வருவாய் திடீர் உயர்வு ஆகியவை உலகளாவிய தங்கத்தின் தேவையை குறைக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
இதனிடையே, தங்கம் விலை இனிமேல் ஏறுமுகத்திலா அல்லது இறங்குமுகத்திலா என்ற கேள்வியில் இருந்தவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமர் மோடியின் வீடியோ பதிவு அமைந்திருக்கிறது. சமீப காலமாக ஜென்சி இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும், அவர்களை எளிதில் அணுகும்விதமாகவும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக்கி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
அந்த வகையில் அவர் வெளியிட்ட வீடியோவில் மிகவும் அவசியமாக சூழ்நிலைகளில் மட்டுமே தங்கம் வாங்கும்படியாக அவர் அறிவுறுத்தி இருந்தார். பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையிலும் அவருடைய அறிவிப்பானது தங்கம் விலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று (செப்டம்பர் 2) ரூ. 225 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,950க்கு விற்பனை ஆனது.சவரனுக்கு ரூ. 1,800 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 3) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,320 உயர்ந்து, ரூ.1,13,920-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.255-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது.