☰
×

தங்கம் கிராம் ரூ.13,640, சவரன் ரூ.1,09,120க்கு விற்பனை..!!

 

ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 1,12,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை ரூ. 1,880 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,10,120க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, மாலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,09,320க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன்படி,நேற்று ஒரே நாளில் காலை, மாலை என இரண்டு முறை தங்கம் விலை குறைந்திருக்கிறது.

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று  தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.13,640-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 குறைந்து, ரூ.1,09,120-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.