☰
×

சரசரவென உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: சவரன் ரூ.1,10,000-ஐக் கடந்து அதிரடி உயர்வு!

 

தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்தியாவை பொருத்தவரை விசேஷ நாட்களில் தங்கம் விலை ஏறுமுகத்தில் காணப்படும். ஆனால், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் அதிகரித்ததன் விளைவாக சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்து வருகிறது. அதன் காரணமாக இந்தியாவிலும் அவ்வபோது தங்கம் விலை ஏறினாலும் பெரும்பாலும் இறங்குமுகத்தில் தான் இருக்கிறது.

சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்றத்தின் எதிரொலியாக, உள்நாட்டு சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது

 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.13,775-க்கும், சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.1,10,200-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.245 ஆகவும், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,45,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது