தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இல்லை..!!
தங்கம் விலை மீண்டும் ஏறத் தொடங்கியிருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 13 ஆயிரம் குறைந்த நிலையில் இந்த மாதம் தொடங்கியதிலிருந்தே விலையேற்றம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. ஒரு சில நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 7 ஆயிரம் அதிகரித்துள்ள தங்கம் விலையானது, இனிவரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
குறுகிய காலத்தில் அதிக லாபம் தருகிற முதலீடுகளின் மீது உலக நாடுகள் கவனம் செலுத்தினாலும், பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தின் மீதும் நிரந்தர முதலீடுகளை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆபரணத் தங்கத்தின் விலையில் கடந்த 2 நாட்களில் ரூ.4,800 உயர்ந்து நேற்று ஒரு கிராம் ரூ.13,700க்கும், ஒரு சவரன் ரூ.1,09,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலையிலும் எந்த மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.260க்கும் ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.