×

வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி: மளமளவென குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை..!!

 

தங்கம் மற்றும் வெள்ளி விலை தினந்தோறும் மாறி மாறி வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நகை முதலீட்டாளர்கள் எப்போது தங்கம் வாங்கலாம் என்ற கேள்வியில் உள்ளனர். இதனிடையே, சர்வதேச சந்தையில் மற்றொரு உலோகம் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதுதான் செம்பு.

சுத்திகரிக்கப்பட்ட மதிப்புமிக்க உலோகங்களாக பார்க்கப்படுகிற தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றின் விலையானது அமெரிக்க பொருளாதார நிலை மற்றும் டாலர் மதிப்பை பொறுத்து மாற்றம் கண்டு வருவதால், முதலீட்டாளர்கள் 'தொழில்துறை உலோகங்களின் அரசன்' என்று அழைக்கப்படுகிற செம்புவை அதிகளவில் வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் செம்பின் விலையும் உயர்ந்து வருகிறது.

இருப்பினும், இந்தியாவை பொறுத்தவரை திருமணம், சடங்கு உள்ளிட்ட சுப நிகழ்வுகளில் மதிப்பு மற்றும் மரியாதையை பிரதிபலிப்பதாக தங்கம் பார்க்கப்படுவதால் இதன் விலையேற்றம் மிக குறைந்த அளவில் தங்கம் வாங்குகிற வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 10) ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.880 உயர்ந்தது. இதன்படி நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கும், ஒரு சவரன் ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை நேற்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.255-க்கு விற்பனையானது.

இன்று (செப்டம்பர் 11) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,920 குறைந்து, ரூ.1,12,120-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.