×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு!!

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்துள்ளது. 

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அடுத்தடுத்து முகூர்த்த  நாட்கள் என்பதால் தங்கம் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 66 ரூபாய் உயர்ந்து கிராமுக்கு  4620 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்படி ஒரு சவரன் ஒரு சவரன் விலை ரூ.36960-க்கு விற்பனையானது.  நேற்று தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துரூ.37,008-க்கு விற்றது.  இதன்படி ஒரு கிராம் தங்கம்  ரூ.4 ஆயிரத்து 626 ஆக உள்ளது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்துள்ளது. இதன் மூலம்  ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.37,240-க்கு விற்பனையாகி  வருகிறது. அதேபோல ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ரூ.4,655-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.71.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.