×

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.208 அதிகரிப்பு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததையடுத்து, தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்ததால், தங்கம் விலை மேலும் உயரும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தங்கம் விலை கணிசமாக குறைந்தது. பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டதும் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததே இதற்கு காரணம். இதன் பிறகு, தங்கம் விலை பெரிதாக மாற்றத்தை சந்திக்கவில்லை.
 

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததையடுத்து, தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்ததால், தங்கம் விலை மேலும் உயரும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தங்கம் விலை கணிசமாக குறைந்தது. பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டதும் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததே இதற்கு காரணம். இதன் பிறகு, தங்கம் விலை பெரிதாக மாற்றத்தை சந்திக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 உயர்ந்து ரூ.4841க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.206 உயர்ந்து ரூ.38,728க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.74.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,100க்கும் விற்பனையாகிறது.