×

அதிரடியாக உயர்ந்தது தங்க விலை; ஒரு கிராம் தங்கம் ரூ.4,816க்கு விற்பனை!

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று அதிரடி ஏற்றத்தை சந்தித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்பட்டது. இதனால் எல்லா தொழில்களும் முடங்கி, நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்தது. ஏற்கனவே தங்க வரத்து குறைவால் அதிகரித்து வந்த தங்க விலை, ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்தது. தங்க விலை சுமார் ரூ.50 ஆயிரத்தை எட்டும் என கூறப்பட்டது. ஆனால் தங்க விலை
 

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று அதிரடி ஏற்றத்தை சந்தித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்பட்டது. இதனால் எல்லா தொழில்களும் முடங்கி, நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்தது. ஏற்கனவே தங்க வரத்து குறைவால் அதிகரித்து வந்த தங்க விலை, ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்தது. தங்க விலை சுமார் ரூ.50 ஆயிரத்தை எட்டும் என கூறப்பட்டது. ஆனால் தங்க விலை கணிசமாக குறைந்து ரூ.39 ஆயிரத்தில் நீடித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்திருக்கிறது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.76 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,816க்கு விற்பனை யாகிறது. அதன் படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.38,528க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.63.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.