தீபாவளி அன்னைக்கு இந்த மாவட்டங்கள்ல வெளுத்து வாங்கப்போகுது! உங்கள் மாவட்டம் லிஸ்ட்ல இருக்கா?
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கடலுாரில், 9 செ.மீ., மழை பெய்தது. மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய, தீவிர புயலான முரசு, வடக்கு, வட மேற்கில் நகர்ந்து, நேற்று அதிகாலை, ஆந்திர மாநிலம் நெல்லுார் - நரசாப்பூர் இடையே கரையை கடந்தது.
இதையடுத்து இந்த புயல் படிப்படியாக வலுவிழந்து வருகிறது. தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் கர்நாடக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தேனி, கோவை மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளில், இன்று இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்;
சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில், அடுத்த ஐந்து நாட்களுக்கு, ஒரு சில மாவட்டங்களில், கனமழை தொடர வாய்ப்புள்ளது. தீபாவளி நாளான நவ., 8ல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.