"ஆண்டவர் ஆண்டவர் தான்" - விஜய் என் எதிரி இல்ல, என் எதிரியை நானே முடிவு பண்ணிட்டேன் - கமல்..!
கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.பி கமலிடம் தவெக் தலைவர் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.திமுக தான் தங்களுக்கு முக்கிய எதிரி என்று தவெக விஜய் கூறி வருகிறார். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு கமல் ஹாசன் கூறியதாவது,
என் எதிரி, நேரடி எதிரி என்றால் அது சாதிவெறி தான். சாதிவெறி என்பது ரொம்ப ரொம்ப வன்முறை நிறைந்தது. அதை விரைவில் சரியான முறையில் கையாள வேண்டும். அது தான் என் எதிரி. என் எதிரியை நான் தேர்வு செய்துவிட்டேன். அது பெரிய எதிரி என்றார்.
சினிமாவில் மட்டும் அல்ல அரசியலிலும் சீனியர் என்கிற முறையில் விஜய்க்கு ஏதாவது அறிவுரை வழங்க விரும்புகிறீர்களா என்கிற கேள்விக்கு கமல் கூறியதாவது, அறிவுரை வழங்கும் இடத்தில் நான் இல்லை. நான் அறிவுரை கேட்டது இல்லை ஏனென்றால் அது எனக்கு சரியான நேரத்தில் கிடைத்ததே இல்லை. அதனால் என் தம்பிக்கு அறிவுரை வழங்க இது சரியான நேரம் இல்லை. நம்மை விட அனுபவம் தான் சிறந்த ஆசான். நான் ஒரு சார்பாக இருக்கலாம் ஆனால் அனுபவம் அப்படி இல்லை. நீங்கள் எதை கற்க வேண்டுமோ அதை சரியாக கற்றுக் கொடுப்பது அனுபவம் தான் என்றார்.