×

தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியம் : ஒரே முகவரியில் 45 போலி நிறுவனங்கள் ஆரம்பித்த கோவா இரவு விடுதி உரிமையாளர்..!

 

கோவா அர்போரா பகுதியில் இயங்கி வந்த பிரச் பை ரோமியோ லைன் இரவு விடுதியில் கடந்த 6 ம் தேதி நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த உடன் அந்த விடுதி உரிமையாளர்கள் கவுரவ் லூத்ரா மற்றும் சவுரப் லூத்ரா ஆகியோர் தாய்லாந்துக்கு தப்பியோடினர். பாங்காக் சென்ற இந்திய அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர். அங்கிருந்து அழைத்து வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.கோவாவில் அவர்களுக்கு சொந்தமாக இருந்த மற்றொரு விடுதியை அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். 

இந்நிலையில், தீவிபத்தைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் 42 போலி நிறுவனங்களை துவக்கியுள்ளனர். இதற்கு அவர்களுக்கு கிடைத்த நிதி மற்றும் அவர்களின் தொழிலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
 

இந்த போலி நிறுவனத்துக்கு அவர்கள் இருவருமே இயக்குநர்களாக உள்ளனர். மேலும், அந்த நிறுவனங்களானது2590, கீழ் தளம்,ஹட்சன்லைன்வடமேற்கு டில்லி என்ற முகவரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தாய்லாந்து சென்று வந்தாலும் அவர்களின் நிறுவனங்களுக்கு என வெளிநாடுகளில் எந்த செயல்பாடும் இல்லை. பயனாளர்கள் மற்றும் அவர்களின் ஆலோசனை என ஏதும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.சேவைத்துறையை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மூலம் அவர்கள் நிதி மோசடி, பண மோசடி செய்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.