×

உடனே கடைக்கு போங்க... 4-வது நாளாக குறைந்த தங்கம் விலை..!!

 

தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் தங்கம் விலை குறையுமா? அல்லது இன்னும் கூடுமா? என்ற குழப்பத்தில் நகை பிரியர்கள் உள்ளனர். ஏனெனில், தங்கம் விலையானது தற்போது தேவையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படாமல் முதலீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதாக கூறுகின்றனர் நிபுணர்கள்.

இதனால், ஒருசில நாட்கள் தங்கம் விலை ஏறுவதும் அடுத்த சில நாட்களுக்கு இறங்குவதுமாக இருக்கிறது. சர்வதேச அளவில் கடந்த பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் தங்கம் விலையானது தற்போது 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. அதேபோல், வெள்ளி விலையும் 40 சதவீதத்திற்கும் மேல் குறைந்திருக்கிறது.

தங்கத்தின் விலை, கடந்த 3 நாட்களில் ரூ.3,600 வரை சரிந்துள்ளது. இந்த சரிவு, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (ஜூலை 08) தங்கம் ஒரு சவரன் ஒட்டுமொத்தமாக ரூ.1,200 சரிந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,06,000-க்கும், ஒரு கிராம் ரூ.13,250-க்கும் விற்பனையானது. 1 கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,45,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 09) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து, ரூ.1,05,760-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது